ஆரோக்கியமான அழகே நிரந்தரமானது

Interview
Site Admin 2024-12-22 12:13:00

பிரபல அழகுக்கலை நிபுணரான பர்ஹானா ரியாஸ் வழங்கிய பேட்டி

பேட்டி கண்டவர் பாத்திமா நளீரா

1 கேள்வி _ பிரபல அழகுக்கலை நிபுணர் என்றவகையில் உங்களிடமிருந்து மேலதிகமான தகவல்களை எமது தினகரன் செந்தூரம் வாசகர்களுக்காக தாருங்கள்    

பதில்-  நான் பர்ஹானா ரியாஸ்.நான் பிறந்து வளர்ந்தது மாவனல்ல ஹெம்மாதகம. திருமணம்முடித்தது மாத்தளையில். கடந்த 20வருடங்களாக வறக்காமுறை மாத்தளையில் வசித்து வருகிறேன். எனது அழகுக்கலை நிலையம் இருப்பது அங்கு தான். ஆயுர்வேத அழகுக்கலை யில் ஆரம்பித்த எனது இந்த பயணம் பல்வேறு அழகு மற்றும் ஆரோக்கிம் சம்பந்தமான பல துறைகளில் கற்று இன்று ஒரு அரோமா தேரபிஸ்டாக, அழகு சாதனை பொருட்களை தயாரிப்பவர் , மணப்பெண் அலங்கரித்துக் மற்றும் பாரம்பரிய முறையில்  ஆயுர்வேத அழகுக்கலை நிபுணரான இருக்கிறேன். அத்தோடு நான்  ஒரு அழகுக்கலை ஆசியராகவும் பல மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்தி வருகிறேன்

 2-கேள்வி   இன்று நான் உங்களிடம் கேட்கப்போகும் பல கேள்விகள் முகம் மற்றும் உடல் தோற்றத்தின் நிறமாற்றம் அதாவது சிவப்பு (வெள்ளை) நிறமாக மாறுதல் சம்பந்தமாக - சொல்லுங்கள் அழகாக இருப்பது எல்லோருக்கும் பிடித்தமான தொன்று ஆனால் அந்த அழகை விலை கொடுத்து வாங்கி ஆபத்தில் விழுந்து விடுவதை இன்றைய பெரும்பாலான பெண்களின் திடீர் சிவப்பாகுதல் மூலம் அறிய முடிகிறதல்லவா ?

பதில் - ஆமாம்  இன்று நமது சமூகத்தில் இருக்கும் ஒரு பாரிய பிரச்சனை  வெள்ளையாகுதல் எப்படியாவது எதை பூசியாவது வெள்ளையாக வேண்டும் என்பதே. 12,13 வயதுல இருந்தே இப்போ இருக்கிற தலைமுறை க்கு வெள்ளையாக வேண்டும் என்ற அவா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சினிமா நடைகளின் தாக்கம் மூல காரணம் வெள்ளை தான் அழகு என்று இப்போ பிஞ்சு மனசுலே பதித்தாகி விட்டது. அதனால வெள்ளையாகுல் என்பதற்காக பல்வேறுவகையான ப்ளீச்சிங் தன்மை கொண்ட க்ரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி பக்க விழைவாக தோல் நோய்களையும் சேர்த்தே வாங்கி விடுகிறார்கள். திடீர் சிவப்பாகுதல் என்றால் அது ப்ளீச்சிங் தன்மை கொண்ட க்ரீம்களை பாவிப்பது மற்றும் தற்போது நடைமுறையில் வந்துள்ள ஊசி மருந்துகளை ஏற்றி வெள்ளையாவது சர்வ சாதாரமாகிவிட்டது.

இதன் பக்க விழைவுகளை வெகு விரைவில் ஏற்படும்.நிறத்தை மட்டும் வைத்து அழகை வெளிப்படுத்த நினைப்பது நம் அறியாமையே..

3_ கேள்வி  நாளுக்கு நாள் பலவகையான அழகுக்கலை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் அத்தனைக்கும் நிச்சயமாகமவுசு உண்டு. ஆனால் தரமான அழகு நிலையங்களை எப்படி தேர்ந்தெடுப்பது? அதிகரித்து வரும் அழகு தயாரிப்புக்களில் எந்தளவுக்கு ஆரோக்கியம் உள்ளது?ஏனேன்றால் எப்பாடுபட்டேனும் தங்கள் சருமத்தை சிவப்பாக்கிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள .இதனைப்பறை விவரியுங்கள்

பதில் _ நீங்கள் மூன்று கேள்விகள் கேட்டு இருக்கிங்க சகோதரி நளீரா  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அழகு நிலையங்கள் என்று பார்ககும் போது அழகாவதற்கு மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே 

 அதிலும் தரமான அழகு நிலையம் எனும் போது குறைந்ந பட்சம் NVQ level 4 தகுதியாவது இருக்கானு பாக்கலாம். இப்போ பாஸ்ட் பூட் மாதரி பாஸ்ட் 2,3 நாள் படிச்சி சான்றில் பெற்றவுடன் அவர்களும் தன்னை அழகுக்கலை நிபுணராகவே அறிமுப்படுத்துகிறார்கள். இவர்களிடம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். 


அத்தோடு இன்று பல்வேறு வகையான  சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்வகைகள் சந்தையில் இருக்கிறது. தராமனாம பொருற்களுடன் தரம் இல்லாத தோல் நோய்களை ஏற்படுத்தும் கிரீம் வகைகளும் உள்ளன. ப்ளீச்சிங் தன்மை அற்ற   அங்கிகாரம் பெற்ற நல்ல தரமான க்ரீம் வகைகள் பயன்படுத்தலாம்.

4 கேள்வி. சருமத்தை வெண்மையாக்கிடும் கிரீம்கள் மருத்துவதுறை அங்கீகாரம் பெற்றவையா? கிரீம்களை எப்படி இனங்கண்டு கொள்வது?

இன்றைய இளம் மற்றும் நடுத்தர வயது பெண்கள் தமது உடல் ஆரோக்கியத்தைதீதொலைத்து பல பக்க விளைவுகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அழகுகலை நிபுணர் என்ற வகையில் இதனைப்பற்றி கூறுங்கள்

பதில் _ நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை  . சருமத்தை வெண்மையாக்கிடும் கிரீம் வகைகளுக்கு  மருத்துவத்துறையில் அங்கீகாரம் வழங்குவதில்லை காரணம் நூற்றுக்கு தொண்ணூரு வீதமான கிரீம்களில் ப்ளீச்சிங் மற்றும் பரபன் எனற மென்பொருள் காணப்படுவாதால் ஆனால்   சருமத்திற்கு கேடு அற்ற பொருள் சேர்க்கப்படவில்லை என்று லப்  டெஸ்ட் மூலம் சான்றிதழ் பெறலாம். அவ்வகையான உற்பத்திகளை விற்பனை செய்ய அரச அனுமதி கிடைக்கும்

கிரீம்களை வாங்கும் போது சருமத்திற்கு கேடுதல் தரும் பொருற்கள் உள்ளீடாக உள்ளதா என்று அவதானியுங்கள்.

தனது சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை தெரிவு செய்யுங்கள்

 ஆரோக்கியான அழகே நிரந்தரமானது நன்றாக தண்ணீர் குடிக்கலாம் கீரை வகைகளை சாப்பிடலாம் விட்டமின் சீ சார்ந்த உணவுகளை உற்கொள்வதால் பொழிவான ஆரோக்கியமான நிறத்தை பெறலாம்

மரக்கறிகளை அதிகளவில் சேர்த்து சாப்பிடலாம்

 5 _ கேள்வி. ஆயுர்வேத மூலிகைகளால் தோலின் பளபளப்பை ஏற்படுத்தி நிறமாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?அத்தோடு வீட்டில் சமையலறைப்பொருட்களை கொண்டு எப்படி நிறமாற்றம் பெற முடியும்?

பதில்- நிச்சயமாக ஆரம்ப காலத்துல ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு தானே  அன்றைய காலத்து பெண்கள் அழகா இருந்தாங்க.

 ஆதி காலத்தில் முகத்திற்கு தேன் பூசி வந்தார்கள் . பூக்கள் இலைகள் மரப்பட்டைகள் வேர்கள் மூலம் தான் அவர்கள் அழகுசாதன பொருற்களாக பயண்படுத்தினார்கள். 

 வெள்ளை சந்தனம் ,கஸ்தூரி மஞ்சல் , தேன் , பாலாடை , வெட்டிவேர்  , அருகம்புல் , புற்று மண்  , இளநீர்  போன்று பல கூரிக்கொண்டே போகலாம்.

சமயலரையில் இருக்கும் அரிசி மா , உழுந்து மா , கடலை மா ,  தயிர் , தக்காளி‌, கரட்  பீட்ரூட்     மற்றும் உருளை கிழங்கு போன்ற வற்றை குறிப்பிடலாம்.   உருளைக்கிழங்கு ஒரு இயற்கை ப்ளீச்சிங் தன்னை கொண்டதாகும். 

 வேப்பிலை  கற்றாலை.   போன்றவை சருமத்தை இளமையாக பொழிவாக வைத்திருக்கு உதவும் சிறந்த இயற்கைப்பொருற்களாகும்

6_கேள்வி. சிகிச்சை மூலம் அதாவது ஊசி போடுவது மற்றும் மாத்திரைகளை எடுப்பதென்று தோல் நிறத்தை சிவப்பாக்கி விட முடியுமா? இதன் மூலம் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டா? கறுப்பு நிறம் காட்டிலும் சிவப்பு நிறம் தான் வசீகரமானது என்னும் தவறான எண்ணம் தான் சருமத்தின் நிறத்தை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தூண்டுகிறதா!?

பதில் _ சிகிச்சை மூலம் தற்காலிகமான சிவப்பழகை பெறலாம். ஊசிபோடுவது என்பது இலங்கைக்கு புதிதாக வந்துள்ள ஒரு செயற்கை முறையாகும். அதன் பக்க விளைவுகளை பற்றி சொல்ல தற்போது முடியாது. ஒரு மருந்தின் பக்கவிளைவுகளை அறிய கிட்டத்தட்ட பத்தான்டுகள் தேவைப்படும்.சில நேரம் நல்லதாவும் இருக்கலாம் சில நேரம் சரும வியாதிகளையும் ஏற்படுத்தலாம்.


கொலஜன் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதை விட கொலஜன்  தரும் உணவுகளை உற்கொண்டால் ஆரோக்கியமான அழகை நீண்ட நாட்களுக்கு பெறலாம். ஆசியக்கண்டத்தின் பொதுவான நிறம் கருப்பு தான்

 கருப்பு என்றால் இருமை படிந்த கருப்பு அல்ல. மா நிறம் என்றும் பொது நிறம் என்று சொல்வோம். எமது நாட்டின் காலநிலைக்கு ஏற்பவே எமது நிறம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகமான நாடுகளில் ஒன்று  எமது நாடு எமது உடலில் இருக்கும் மெலனின் தன்மையே எனது சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. ப்ளீச்சிங் தன்மை கொண்ட க்ரீம்களை பாவனை செய்வர்களுக்கு வெயிலில் அதிகம் செல்ல முடியாது. அவர்களின் சருமத்தை வெகு விரைவில் சூரிய கதிர்கள் தாக்கிவிடும்.

வெள்ளை. சிவப்பு கருப்பு இது ஒரு நிறம் மாத்திரமே எமது வாழ்க்கையல்ல

7 _ கேள்வி  ஒரு அழகு நிலையத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்தை புதிதாக வரும் வேறு உற்பத்திகள் மூலம் தடுக்க முடியுமா?ஏதாவது ஒரு அழகு சாதனப் பொருட்கள் நுகர்வோரிடையே கடுமையான வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில்வியாபார ரீதியில் போட்டி ஏற்படுவது இயற்கை தானே . உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் ஏதாவது இருக்கிறதா?

பதில்  அழகு நிலையம் என்பது தன்னை அழங்கரிக்க தன் அழகை மெருகூட்ட செல்லும் இடம்

 ஒரு புதிய உற்பத்தி வரும் போது அழகு நிலையத்தை பாதிப்படைய செய்யாது. உதாரணமாக ஒரு புதிய தயாரிப்பான ஹெயா கலர் வந்தால் அதை முறைப்படி  தான் வீட்டிலே பூச முடியாது. அதற்காக ஒரு அழகு நிலையம் சென்று அங்கு அவர்களின் ஆலோசனையுடன் அதை எமக்கு ஏற்ற வகையில் தனது சிகைக்கு ஏற்றவாரு அழகு படுத்திகளாம். 

வியாபாரம் என்றாலே போட்டி தானே.  என்னை சுற்றியும் நிறைய போட்டியாலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நாம் நமது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து தரமான பொருற்களை வாடிக்கையாலருக்கு வழங்கும் போது நம்மை நாடி வரும் வாடிக்கையாலர்கள் வரத்தான் செய்வார்கள்.

 8 கேள்வி. பெண்கள் சுயமரியாதையாக வாழவும் தனித்திறன்  நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் லாபம் ஈட்டும் தொழிலாகவும் இந்த அழகுகலை நிலையங்களை அமைந்துள்ளதல்லவா இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? 

பதில்  பெண்களுக்கென்று ஒரு சுய தொழில் இருப்பது இன்றைய காலகட்டத்தில் பெறுமதியான ஒன்றாகும். அதற்காக இலகுவில் அழககலு நிலையங்களை ஆரம்பிக்க முடியாது ஆரம்பிக்கவும் கூடாது ஏன் என்றால் அழகு என்பது ஒரு கலை அதை உரிய முறையில் கற்று அதற்கான தகுதி பெற்ற பின் ஒரு அழகுகலை நிலையத்தை ஆரம்பிப்பதில் எந்த தவறும் இல்லை. பெண்களுக்கான சுய தொழில் எனும் போது அழகுகலையை முறையாக கற்று அதன் மூலம் நல்ல ஒரு வருமானம் ஈட்ட கூடிய ஒரு தொழிலாக அமைகிறது. ஆனால் முறையாக கற்றல் இல்லாமல் செய்யும் எந்த தொழிலும் கொஞ்ச நாள் .

9 கேள்வி  ஆரோக்கியமான அழகை பேணுதல் என்று நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எவை?

பதில்  _. ஆரோக்கியமான அழகே நிலையானது.  உடல் உருப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு தானாக கிடைக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 7,8 தம்லர் தண்ணீர் குடிப்பது , பழங்கள் சாப்பிடுவது  , பச்சை கீரை வகைகளை சாப்பிடுவது , தானிய வகைகள் சாப்பிடுவது  நேரத்துக்கு உறங்குவது மிக முகக்கியமானது. மனதை சந்தோஷமாக வைத்திருப்பது  இப்படி பல நல்ல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்

10_ கேள்வி. உங்களால் சந்தைப்படுத்த படும் அழகு சாதனப் பொருட்கள் எவை என கூற முடியுமா?

பதில்.  ஆமாம் சகோதரி நளீரா இன்று எனது ஆயுர் வேத முறையிலான தயாரிப்புக்கள நாடலாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகிறது.  தலைமுடி வளர்ச்சிக்கான எண்ணெய் , முகப்பருக்கான சவற்காரம்  மற்றும் கிரீம், அத்தோட ஆரோக்கியமான சருமத்திள்கான முககிரீம்கள்  சருமத்திற்கு எந்த விதமான பாதிப்புக்களும் வராத வகையான உற்பத்திகளே நான் விற்பனை செய்து வருகிறேன்

11  கேள்வி  இல்லத்தரசியாகவும் இலக்கியத்துடன் தொடர்புள்ளவராகவும் அழகு நிலையம்  வைத்திருப்பவராகவும் மாத்தளை பொக்கிஷம் என்ற பெயருடன் பொது சேவையில் ஈடுபட்டவராகவும் இருக்கிறீர்கள் .எப்படி நேர முகாமைத்துவம் செய்கிறீர்கள் உங்களது ஆத்மார்த்தமான சேவைகளுக்கு கிடைத்த விருதுகளைப் பற்றி கூறுங்கள்

பதில்   பொதுவாக பெண்கள் எல்லாரும் இல்லத்தரசிகள் தான் அது தான் எங்களது முதல் கடமையும் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் கண்வன் என்று அவர்களுக்கே முதலிடம். அடுத்த படியா சமூக சேவை பொக்கிஷம் மாத்தளை என்றால் இன்று நாடாலாவிய ரீதியில்   பலரும் என்னையும் எனது சேவைகளையும் அறிவார் .  சமூக சேவை என்பது எப்பவும் தயாராக இருக்க வேண்டிய ஒரு சேவை அதற்கு நேரம் காலம் கிடையாது.  அழகு கலை நிலையம் என்பது எனக்கான அடையாலம் எனது தொழில் . இந்த மூன்றையும் நான் ஒரு போதும் குழப்பிக்க மாட்டேன். பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை.  சமூக சேவைக்கான விருதுகள் பல கிடைத்தாலும் இபாபோது நான் சமூக சேவைக்கான விருதுகளை   ஏற்பதை சந்தோஷமாக மறுத்து வருகிறேன். சேவைக்கு விருது தேவைப்படாது என நினைக்கிறேன்.

12 கேள்வி  நேர்காணலின் இறுதியாக வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

பதில்  ஆமாம் சகோதரி நளீரா பெண்கள் என்றாலே அவர்களுக்கும் ஏதாவது ஒரு வகை சுய தொழில் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆற்றல் நிச்சயமாக உண்டா அது என்னவென்று நீங்களாககே உணர்ந்து உங்களுக்கான சுய தொழிலை உருவாகக்இ கொள்ளுங்கள்.

படிக்கும் வயதில் படியுங்கள் கல்வி அறிவு மிக முக்கியமானது. அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாமல் உங்களுக்குள் இருக்கும் உண்மையான அழகை வெளியே கொண்டு வாருங்கள். போலிகளை கண்டு ஏமாராதிகள். மனதில் தைரியாமாக இருங்கள். வெற்றி தோல்வி மாறி மாறி வரும் போது துவண்டு போகாதீர்கள்.

நீங்கள் உண்மையாக நேர்மையாக இருந்தால் உங்களது கல்வி  வியாபாரம்  சுய தொழில் எதுவாக இருந்தாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது.   நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நன்றி தினகரன் செந்தூரம்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail