அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆளில்லாத விமானம் மூலம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



