திருகோணமலை கடலில் மிதந்த  சிறிய ரக விமானம்: வெளியான மேலதிக தகவல்கள்!

News
Editor 2024-12-27 19:13:00

திருகோணமலைக்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த விமானி இல்லாத சிறிய ரக விமானம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

இது ஆளில்லா விமானம் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கிஹனகே தெரிவித்தார். 

அது இந்த நாட்டுக்கு சொந்தமான விமானம் அல்ல என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

விமானப்படை பயிற்சியின் போது இந்த வகை விமானங்கள் டார்கெட் ட்ரோன் எனப்படும் வான்வெளியில் இலக்காக பயன்படுத்தப்படுகிறது என்றார். 

அதன்படி, பயிற்சியின்போது விமானம் தீப்பிடித்து கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த 2020-ம் ஆண்டு ஒடிசா கடல் பகுதியில் இதுபோன்ற ஒரு விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்ததில் அது இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. 

திருகோணமலை கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட விமானம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதுடன், 2020 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விமானமும் இதே நிறத்தில் இருந்ததாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

பயிற்சியின் போது தீப்பிடித்து கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் மீனவர்கள் சிறிய ரக விமானத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது சுமார் 6 அடி நீளமும் சுமார் இரண்டடி விட்டமும் கொண்டது. 

நேற்றிரவு குறித்த சிறிய ரக விமானத்தை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

பின்னர் இது திருகோணமலை துறைமுக பொலிஸ் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail