ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!

Provincial
Editor 2024-12-29 20:30:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை - வட்ட எனும் வயல் பகுதியில் யானை ஒன்று இன்று (29) மாலை உயிரிழந்துள்ளது.

இந்த யானை இன்று காலை எழும்ப முடியாத நிலையில் வயலில் விழுந்து கிடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்..

இவ்வாறு எழும்ப முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail