9ஆவது பாராளுமன்றம் ஆரம்பமான தினத்தன்றும் 10ஆவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான தினத்தன்றும் நாடாளுமன்ற தேநீர் விருந்துக்காக செலவிடப்பட்ட தொகை வெளியாகியுள்ளது.
இதன்படி கோட்டாபய ராஜபக்க்ஷவின் 9ஆவது பாராளுமன்றத்தின் தேநீர் விருந்து வைபவத்துக்காக 2,87,340 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் அநுரகுமார திசாநாயக்கவின் 10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப நாள் தேநீர் விருந்துக்கான செலவு 339,628 ரூபாவாகும்.
இந்த தகவல்களை சிங்கள பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.



