142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் கைதான பெண்!

News
Editor 2024-12-30 09:35:00

சட்டவிரோதமான முறையில் கொக்கேயினை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த 41 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கானாவிலிருந்து அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் வந்துள்ளதுடன் தென்னாபிரிக்க கடவுச்சீட்டில் பயணித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் 4,068 கிராம் கொக்கேயின் போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட தெரிவித்தார்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail