அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளன.
இலங்கை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (SLCERT) தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சேனலுக்கான அணுகலை விரைவில் மீட்டெடுக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



