ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ள போதிலும் யுக்திய போன்ற விசேட நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துப்படி, 'யுக்திய' நடவடிக்கை ஒரு ஊடகக் காட்சியாகும்.
இவ்வாறான அர்த்தமற்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்படுவதாகவும் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமது பிரதேசங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த போதைப்பொருள் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அண்மைய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாவனையாளர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் ‘யுக்திய’ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர. நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து யுத்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.



