மாத்தறை சிறைச்சாலையின் கட்டிடத்தின் மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்ததில் கைதிகள் சிலர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்கு அருகாமையில் உள்ள மரத்தின் கிளை ஒன்று நேற்று (01) முறிந்து வீழ்ந்ததில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மிதிகம துர்க்கி கிராமத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



