11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது

Provincial
Editor 2025-01-02 12:28:00

(க.கிஷாந்தன்) 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் நேற்று  (01)  கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.

உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட 11 கஞ்சா செடிகளையும், 02.01.2025 நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail