ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது: சம்மாந்துறை பொலிஸாரால் விசாரணை முன்னெடுப்பு!

crime
Editor 2025-01-03 11:35:00

(பாறுக் ஷிஹான்)

ஐஸ் போதைப்பொருளுடன்  கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட  புறநகர்  பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை   சம்மாந்துறை  பொலிஸார் நேற்றுக் (2)  கைது செய்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நீண்ட காலமாக  ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரு சந்தேக நபர்களே கைதாகினர்.

கைதான  27 மற்றும்  40 வயதுடைய இரு  சந்தேக நபர்களும் கருவாட்டுக்கல், உடங்கா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து  4200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் சந்தேக நபர்களையும்  சான்றுப் பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail