வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகானவியா வீதி, வள்ளிவல பிரதேசத்தில் இன்று (4) அதிகாலை 1 மணியளவில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் தருக் என்ற 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
T56 ரக துப்பாக்கியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினரே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



