'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட ஒலி நாடா ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி
வருகிறது. ஆனால் இந்த ஒலி நாடாவில் கூறப்படுபவை எவையும் உண்மையில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்த ஒலிநாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவிக்கையில்,
இந்த ஒலி நாடாவை பொலிஸார் வெளியிடவில்லை எனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



