(ருத்திரன்)
மட்டக்களப்பு செங்கலடி செயலக பிரிவுக்கு உட்பட்ட மயிலவெட்டுவான் பகுதியில் யானை துரத்தியதில் உயிரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் பாய்ந்த ஒருவர் உயிரிழப்பு.
மயிலவட்டவான் வீரக்கட்டு ஆற்றில் நேற்று (5) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வந்தாறுமூலை உப்போடை வீதி மயிலவட்டவான் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கருணாகரன் (50) 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமையாக தனது மகனுடன் குறித்த பகுதிக்கு விறகு எடுக்கச் சென்று திரும்பி கொண்டிருந்த நிலையில் காட்டுக்குள் மறைந்திருந்த காட்டு யானை துரத்தியதில் இருவரும் உயிரை காப்பாற்றுவதற்காக ஆற்றை நோக்கி ஓடிவந்த நிலையில் இருவரும் ஆற்றில் குறித்துள்ளனர்.
ஆற்றில் குதித்த தனது தந்தை நீரில் அடித்து செல்லப்படுவதை மகன் அவதானித்துள்ளார்.
குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து ஆற்றில் தேடும் பணியின்போது குறித்த நபர் சடலமாக ஆற்றில் மீட்கப்பட்டார்.
கழகரடியனாறு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து மரண விசாரணை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மகிழவட்டவான் கிராமத்துக்கு காட்டு யானைகள் தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றது .அங்குள்ள பாதுகாப்பு யான வேலிகளை உடைத்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக உடைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகள் திருத்தப்படவில்லை.
வேலியை திருத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



