சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதுவரை பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 14 ஆம் திகதி அவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தவில்லை.
ஆனால், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களிலும், அது நடைபெறாத சில நாட்களிலும் அவர் நாடாளுமன்றத்துக்கு வருவார் எனவும், சபாநாயகர் எங்கு தங்கியுள்ளார் என்பது நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் தெரியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜகத் விக்கிரமர்த்தன கடந்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அசோக ரன்வல பதவி விலகியதன் பின்னர் சபாநாயகரானார்



