கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



