வெலிகம துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் கைது!

News
Editor 2025-01-07 08:59:00

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால் நேற்று (06) இரவு வெலிகம பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய  வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞர் காயமடைந்தார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail