அனைத்தும் பொய்யானவை: ஏமாந்து இழந்து விடாதீர்கள்!

News
Editor 2025-01-08 18:46:00

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

போலி குறுஞ்செய்திகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்குவார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த இணைப்புகளைத் தடுப்பதற்கு நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்தப் போலியான இணைப்புகள் மற்றும் அவற்றின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொளவீர்கள்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மூன்றாம் தரப்பினரின் மின்னஞ்சல் கணக்குகளை அணுகுவது நிறைய சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும்  தெரிவித்துள்ளது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail