கூட்டுறவுத் தேர்தலுக்கான சுவரொட்டிகளை தேசிய மக்கள் சக்தி ஒட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
clean sri lanka என்று கூறி நாட்டை சுத்தப்படுத்த முன்வருகின்ற அதேவேளை, கெஸ்பேவ பிலியந்தலை போன்ற பிரதேசங்களில் கூட்டுறவுத் தேர்தலுக்கான சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



