மரண தண்டனையின் பின்னர் கணிசமான காலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) காலை அவர் மருத்துவமனையில் இருந்து சிறை அறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
துமிந்த சில்வா எந்தவித சுகயீனமும் இன்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அண்மையில் ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



