மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கிய நபர் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்விலாஹேனவத்த பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கிடுலம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய "காலி கட்டா" என அழைக்கப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்த 4 மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
.மோட்டார் சைக்கிள்கள் காலி, அஹுங்கல்ல மற்றும் களுத்துறை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு இலக்கத் தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், மோட்டார் சைக்கிள்களை திருடி, குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கியது தெரியவந்தது.
சந்தேக நபர் தனிப்பட்ட தாக்குதல், ஹெரோயின் கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பாக தீவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதற்கு முன்னர் வழக்குத் தொடரப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று (12) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



