மீண்டும்.. மீண்டும் வா...! மீண்டும்... மீண்டும் போ...!

News
Editor 2025-01-13 12:29:00

பாரத லக்ஷ்க்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு திடீரென கடுமையான சுகயீனம் ஏற்பட்டது.

சுகயீனம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (12) மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு  கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வாவின் சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்ததையடுத்து, அவரை அழைத்து வருவதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அங்கு சென்றதாகவும் கைதி மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தெரிவித்தார்.

சிறை மருத்துவர்களின் பரிந்துரையில்
துமிந்த சில்வா கடந்த 10ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் பொதுச் சிறைச்சாலையான கே-1 க்கு மாற்றப்பட்ட அன்றைய தினமே பிற்பகல் 2.00 மணியளவில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail