மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
தென் மாகாணத்தில் ஏற்கனவே இவ்வாறான பிரிவுகள் இயங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
விசாரணைகளை நெறிப்படுத்துவதே இதன் நோக்கம் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சில விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நேரடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்..



