இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழு ஏற்பாடு செய்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞான முன்னோடித் தேர்வு அரப்பொலகந்த தமிழ் மகாவித்தியாலத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை களுத்துறை மாவட்டப் பொறுப்பாளர் திருமதி. தம்பிராஜா கோகிலாவின் மேற்பார்வையில் ஆரம்பமானது.
பத்து விடுமுறை நாள்களில் தொடர்ச்சியாகப் பத்துத் தேர்வுத்தாள்கள் நடத்தப்பட்டு, இறுதியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆசிரியமாமணி திருமதி சசிமா இரவிக்குமார் ஆசிரியரால் விஞ்ஞானக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை இலங்கை சைவநெறிக் கழகப் பொருளாளர் .கோ.இளையராஜா முன்னின்று நடத்தினார்.
அதேசமயம், அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் 3,4,5 மாணவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவால் மேற்கொள்ளப்பட்டுவரும் தனித்துவ வகுப்புக்களையும் மேற்பார்வை செய்யும் பேறு அமையப்பெற்றது.







