உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் தைத்திருநாளானது இம்முறையும் கொழும்பில் மிக விமரிசையாக நடைபெற்றது.
அனைத்து இன மதத்தவர்களும் செறிந்து வாழும் கொழும்பு 15 - மாதம்பிட்டிய ஹேனமுல்ல தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடனும் பிரதேச வாசிகளால் தைப் பொங்கல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இதன்போது பிரதேச மக்கள் ஒன்றாக பொங்கல் பொங்கியதுடன் சிறுவர்களின் நடன நிகழ்வும், பெண்களின் தைப்பொங்கல் சிறப்பு கோலப்போட்டிகளும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கொழும்பு ஐடிஎம் நேசன் கெம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருரமான கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் அனுசரணையில் இடம்பெற்றதுடன் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கொழும்பு 15 மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி "பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் சிரந்தவும்" கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



















