சாய்ந்தமருதுவில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

News
Editor 2025-01-16 18:14:00

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் உணவகங்கள்,   பழக்கடைகள் மற்றும் வெதுப்பகங்களில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதனின் ஆலோசனைக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான ஏ. வாசித் அஹமட், ஏ.எல்.எம். அஸ்லம், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  முறையான அனுமதிப்பத்திரமின்றி  உணவு கையாளுதல், உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமை, வியாபார சான்றிதழ் இன்மை, பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வகைகள் போன்ற முறையற்ற செயற்பாடுகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த திடீர் பரிசோதனையின் போது ஏழு உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள்  கைப்பற்றப்பட்டதுடன் முறையான வியாபார அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளாத வியாபார நிலையங்களை குறித்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் வரை மூடி வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail