ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு கௌரவம்!

Provincial
Editor 2025-01-17 18:23:00

(றாஸிக் நபாயிஸ்)

ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு "இலங்கை நிர்வாக சேவை உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பும்" நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 15 வருடங்களுக்கு மேலாக சிறந்த பிராந்திய ஊடகவியலாளராகவும், 150க்கும் மேற்பட்ட ஆய்வு மற்றும் புலனாய்வு கட்டுரைகளை எழுதி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தவரும், ஊடக தர்மத்தை நிலைநாட்ட நீதிமன்றம் மற்றும் பல விசாரணைகளை சந்தித்தவருமான, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் ஊடக மற்றும் சமூக சேவைகளை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு கௌரவித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail