ட்ரம்பின் பதவி ஏற்புவிழா இடம் மாற்றப்பட்டது!

World
Editor 2025-01-18 19:15:00

(ஊர்மிளா)

திங்கட்கிழமை வாஷிங்டன் டிசியில் குளிர் காலநிலை முன்னறிவிப்பு காரணமாக டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா வீட்டுக்குள் மாற்றப்பட உள்ளது.

 இதனால் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கபிடல் ரோட்டுண்டா கட்டிடத்திற்குள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார், அங்கு உயரதிகாரிகள் , விருந்தினர்கள் ஆகியோர்  கூடுவார்கள், பிரார்த்தனைகள் , பிற உரைகள் என்பன அங்கு நடைபெறும்.

இதனால் இதனைப் பார்வையிட டிக்கெட் வைத்திருந்த சுமார் 250,000 பேர்  உள்ளே நுழைய முடியாது.

ஆயிரக்கணக்கானோர் பொது நுழைவுப் பகுதிகளில் இருப்பார்கள் அல்லது கபிடல் கட்டிடத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை கேபிடல் ஒன் அரங்கில் வெற்றிப் பேரணி மற்றும் திங்கள்கிழமை மாலை மூன்று தொடக்க விழா உட்பட, தனது பதவியேற்பு தொடர்பான மற்ற அனைத்து நிகழ்வுகளும் "அப்படியே இருக்கும்" என்று ட்ரம்ப்  எக்ஸில் எழுதினார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் 1985 இல், ரொனால்ட் ரீகனின் இரண்டாவது பதவியேற்பு மோசமான வானிலை காரணமாக வீட்டிற்குள் மாற்றப்பட்டது.


 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail