பிறைந்துரைச்சேனை கொலைச் சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது!

Provincial
Editor 2025-01-23 20:13:00

 ருத்திரன், பர்சான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரை வாழைச்சேனை பொலிஸார் நேற்றிலிருந்து வலைவரித்து தேடி வந்த நிலையில் இன்று (23)   பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவைச்சேர்ந்த திரு தினேஷ் (8656) அவர்களுக்கு கிடைப்பெற்ற தனிப்பட்ட இரகசியத்தகவலின் அடிப்படையில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திரு சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள இடத்தை அடையாளங்காட்டியுள்ளதுடன்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail