ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு!

events
Editor 2025-01-24 19:54:00

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (24) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் நடைபெற்றுள்ளது.

உணர்வுபூர்வமாக அஞ்சலி இந்நினைவேந்தல் நிகழ்வானது வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. 

இதன்போது, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர் தொடர்பாக நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.

இதில் வட கிழக்கு பகுதிகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail