ஒருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

crime
Editor 2025-01-25 10:32:00

20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபாவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட நட்டஈடு வழக்கு தொடர்பில் மனைவிக்கான பிடியாணையை நிறைவேற்றவும் மனைவியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார்.

இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க நேரிடும் என முறைப்பாட்டாளரிடம் சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து குறித்த இலஞ்சத் தொகையை பெற்றுக் கொள்ளச் சென்றபோதே இவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail