மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள்!

crime
Editor 2025-01-29 20:09:00

இரத்மலானை பெலக்கடை சந்திக்கு அருகாமையில், கல்கிஸை பொலிஸ் பிரிவில், இரத்மலானை மலிபன் சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற பொலிஸ் ஜீப் ஒன்று இரத்மலானை ரயில் நிலைய வீதியிலிருந்து பெலக்கடை சந்தி ஊடாகச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் ஜீப்பை செலுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி 28 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிபவராவார்.

சந்தேக நபர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவரின் ஒழுக்க மீறலுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail