சம்மாந்துறை மாமனாரைக் கொலை செய்த  மூதூர் ஆலிம்சேனை மருமகன்!

crime
Editor 2025-01-30 15:24:00

(கே எ ஹமீட் )
மாமனார் மருமகனிடையே இடம்பெற்ற மோதலில் மாமனார் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29) புதன்கிழமை இரவு  இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னம்பிள்ளை கிராமம் பகுதியில் நேற்று (29) புதன்கிழமை இரவு மாமனார் மருமனிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் மாமனார் மருமகன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாகவே மோதல் ஏற்பட்டு  குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இச்சம்பவம் சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள மகளின் வாடகை வீட்டு முற்றத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, மத்திய வீதி, மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த ( 55) என்பவரே மரணமடைந்துள்ளார்.

மாமனார் மருமகனிடையே இடம்பெற்ற மோதலின்போது அவர் தாக்கப்பட்டு மரணமடைந்தாரா அல்லது மாரடைப்புக் காரணமாக மரணமடைந்தாரா என்பது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சந்தேக நபரான ஆலிம் சேனை ,மூதூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மருமகனை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail