மாணவிக்கு ஆசிரியர் செய்த அநியாயம்: மக்களால் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார்!

crime
Editor 2025-01-31 14:45:00

மாணவி ஒருவருக்கு மதுபானம் வழங்கியதாக கூறப்படும் இளம் ஆசிரியர் ஒருவர் பெல்மதுமல்ல நகரவாசிகளால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டபோது, ​​தாக்குதலில் இருந்து அவர் மீட்கப்பட்டு பெல்மதுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த ஆசிரியர்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கார் ஒன்றிலிருந்து  இறங்கி மாணவி ஒருவர் சிரமத்துடன் நடந்து சென்றதனைப் பார்த்த ஊர் மக்கள் அருகில் சென்று விசாரித்ததில் மாணவி மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் ஆசிரியரின் காரை நிறுத்தி விசாரித்தபோது, ​​அவர் மதுபோதையில் இருந்ததைக் கண்டு, நகரவாசிகள் சிலர் அவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஆசிரியர் தப்பிச் செல்வதற்காக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தின் மேல் தளத்துக்கு ஓடியதையடுத்து பெல்மதுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து அவரை கைது செய்தனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail