கல்முனையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பழுதடைந்த பழங்கள்!

Provincial
Editor 2025-02-01 09:37:00

 

கல்முனை நகர் பகுதியின் பிரதான வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.

கல்முனை நகரில் பழுதடைந்த தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் ​விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற  தகவலில் நேற்று (31) குறித்த பகுதியில் மேற்கொண்ட  சுகாதார பரிசோதர்கள் பழுதடைந்த பழங்களைக் கைப்பற்றியதுடன் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் என்.ரமேஸ், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail