தலையின் வறட்டு தன்மையை போக்கி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல் , துண்டுகளாக்கிய வெட்டி வேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து அரைத்து வைத்துகொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளியுங்கள். இப்படி செய்வதால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்கு தேய்த்து குளிக்கும்போது வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது.



