கொழும்பில் இரு நூல்களின் வெளியீட்டு விழா!

events
Editor 2025-02-02 17:57:00

அஷ்ரப் ஏ சமத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின்  தலைவர் என்.எம். அமீன் ஆங்கிலத்திலும் சிங்கள மொழியிலும் வெளிவந்த தமிழ்  மொழிபெயர்ப்பு நூலான உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் மறைகரம் மற்றும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ)  நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேறானவர்கள் (முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்) என்ற நூல்களின்வெளியீட்டு வைபவம் கொழும்பு 7 ல் உள்ள ஸ்ரீலங்கா பவுண்டேஷன்   மாநாட்டு மண்டபத்தில்  அண்மையில்  நடைபெற்றது.

நூலின் பிரதிகள்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் நாயகம் அஷ்ஷேக் அர்க்கம் மௌலவி, பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன், எம்.எம். சுகைர் மற்றும் பேராசிரியர் எம்.எஸ் அனஸ், திருச்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் சாகுல் ஹமீட்,  வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரீப், சிங்கள மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மகிந்த ஹத்தக்க, ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

நூல் பற்றிய உரைகள்  பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ், எம்.எம் சுஹைர்  எம்.ஏ சுமந்திரன் சிங்கள மொழி மூலம் மஹிந்த ஹத்தக்க ஆகியோர் நிகழ்த்தினார்கள் ஏற்புரை நூலசிரியர்கள் ரவூப் ஹக்கீம், என்.எம் அமீன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், நுவரெலியா பா.உறுப்பினர்  திகாம்பரம், உதுமாலெப்பை, உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் ஆலயத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail