மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தமை தெரிந்ததே.



