ராகம - தலகொல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (05) மாலை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் வீடு திரும்பி மனைவியைச் சோதித்தபோது, அவர் இந்த முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



