அஷ்ரப் ஏ சமத்
மிஸ்ஹாத் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் எழுதிய நூலான இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும் எனும் தலைப்பிலான நூல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமையுரை ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் பா..உ எம்.எம். சுஹைரும் நூல் பற்றிய உரையை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கலாசாரப் பிரிவு பேராசிரியர் எஸ்.எம்.எம் மசாஹிர் ஆகியோரும் ஏற்புரையை நூலாசிரியர் மன்சூரும் நிகழ்த்தினர். இவ் அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ.கே. அப்துல் ராசிக் நன்றியுரை கூறினார்.
நூலின் விசேட பிரதிகள் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ரீ. நவாஸ் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ,பின்னாஸ் இஸ்மாயில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
இந் நிகழ்வில் கல்வியலாளர்கள் ஜாமிஆ நளீமியா விரிவுரையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்
















