இந்த முச்சக்கரவண்டியைக் கண்டால் கல்முனை பொலிஸாருக்கு தவல் வழங்கவும்!

crime
Editor 2025-02-16 12:16:00

பாறுக் ஷிஹான்

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவுக்கு  உட்பட்ட மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 13.ஆம் திகதி இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கமுடைய முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளதாக  முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த முச்சக்கரவண்டி தொடர்பில் தகவல் தெரிந்தால்  0672229222 என்ற தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு    தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail