ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்துக்குச் செல்லும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் பெற்றரி திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஹட்டன் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஒரு வழக்கில் ஆஜராகச் சென்ற ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், நீதிமன்ற நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி வைத்திருந்தார்.
பின்னர் வழக்கு முடிந்ததும் அவர் முச்சக்கர வண்டிக்குத் திரும்பியபோது, முச்சக்கர வண்டியின் பெற்றரி திருடப்பட்டிருப்பதைக் கண்டு ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.



