நூருல் ஹுதா உமர்
Sadaqa Bulletin அமைப்பினால் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு தேவையாக இருந்த மின்மோட்டர் மற்றும் நீர்த்தாங்கியுடனான குழாய்க் கிணறு உத்தியோகபூர்வமாக பாடசாலை நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜின் கோரிக்கைக்குமைய Sadaqa bulletin அமைப்பின் பிரதிநிதி பொறியியலாளர் எம்.சி.கே. நிஷாதின் பரிந்துரையின் பேரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதி பிரோஸிடமிருந்து, பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜின் ஆலோசனைக்கமைய பாடசாலை உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான், ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.சீ.ஏ. மாஹிர், பாடசாலை பொருளாளர் ஏ.எம்.எம். ஸாஹிர் மற்றும் ஆரம்ப பிரிவு ஆசிரியை திருமதி ஹம்சா ஆகியோர் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டனர்.
Sadaqa Bulletin அமைப்பினால் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்துக்கு நீர்த்தாங்கி!
Provincial
Editor
2025-02-21 19:03:00
மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே? கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!




