மருதமுனையைச் சேர்ந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது: மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

crime
Editor 2025-02-25 17:46:00

பாறுக் ஷிஹான்

போதைப்பொருட்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு  விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனை விசேட அதிரடிப்படை  அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர்   பகுதியில்  இன்று  (25)  அதிகாலை   

 மேற்கொள்ளப்பட்ட சோதனை   நடவடிக்கைகளின் போது  33,34 வயதுடைய  மருதமுனை பகுதியை சேர்ந்த 2  சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர்களிடமிருந்து   1,690  மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ். சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய     மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்  இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 
அத்துடன்  கைதான  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்ப்டையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail