மூதூருக்குள் களமிறங்கினார் அதாவுல்லாஹ்: வேலைத் திட்டங்களையும் விளக்கினார்!

Provincial
Editor 2025-03-09 19:13:00

நூருல் ஹுதா உமர்

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (08) மாலை மக்கள் சந்திப்பை தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரஸின் உப தலைவர் டாக்டர் ஏ.உதுமான் லெப்பை, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டாக்டர் எம்.வை.எம்.சியா மற்றும் மூதூர் மத்திய குழு தலைவர் ஏ.எஸ்.எம்.நிஹார்  ஆகியோர் மேற் கொண்டனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மக்கள் தேவைகளை கேட்டறிந்து. அவற்றை மிக விரைவாக நிவர்த்தி செய்வதாகவும் மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கு பல அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்கள் செய்ய இருப்பதாகவும் பல வேலைத் திட்டங்கள் செய்திருப்பதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். மற்றொரு மக்கள் சந்திப்பு மிக விரைவாக மூதூர் பிரதேசங்களில் மேற்கொள்ள இருப்பதாகவும் மக்களுக்கு தெரிவித்திருந்தார்.
 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail