தேசகீர்த்தி றஸ்மியா அப்துஸ் சமது
2017 ஆம் ஆண்டு முதல் தனது சமூகப் பணியை ஆரம்பித்தார்.செய்த்தூன் நகர் பவுண்டேசன் கனடா இதன் மூலம் அறிமுகமான இவர், கஹட்டோவிட்டவில் உள்ள இவரது சொந்த வியாபார ஸ்தாபனத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஏழைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
ஹுசைன் றசாத் ஜனாஸா பௌண்டேசன் மனித உரிமைகள் அமைப்பின் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பாளராகவும் செயல்படுகின்றார்.
அத்துடன் வெளிநாடுகளில் உள்ள முஸ்லீம் அமைப்புக்களின் மூலமாகவும் வெளிநாடுகளில் உள்ள உறவுகள் மூலமாகவும் கிடைக்கும் உதவிகளினால் மற்றவர்களுக்கு உதவியும் செய்கின்றார்.
சலாஹ் பவுண்டேசனின் ஸ்தாபகரும் இவர்தான். இவருக்கு சமூக சேவைக்கான பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.
ஃ தேசமான்ய விருது
ஃ விழித்தெழு பெண்ணே விருது
ஃ இரும்பு பெண்மணிக்கான விருது
ஃ வியாபாரத்திற்கான விருது
ஃ சமூக சேவைக்கான விருது
ஃகீத் ராத்திரி விருது
ஃ தலைமைத்துவ விருது என்பனவற்றை கூறலாம்.
(பூமுதீன்)



