பௌத்த அதிஉயர் பீடத்தால் கௌரவ தேசமான்ய பட்டம் பெற்ற தர்மாவுக்கு பாராட்டு விழா

events
Editor 2025-03-26 10:46:00

இலங்கையில் கரவெட்டி மாநகரில் பிறந்து டென்மார்க்  நாட்டில் குடியேறி கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து இலங்கை மண்ணுக்கு பெரும் தொண்டாற்றிவரும் தர்மா என்று அழைக்கப்படும் தர்மகுலசிங்கத்துக்கு இலங்கையின் பௌத்த அதி உயர் பீடம் கௌரவ தேசமான்ய விருது மற்றும் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இது  தொடர்பில் அவருக்கு கொழும்பு வாழ் யாழ்ப்பாண மற்றும் வடக்கு கிழக்கு  மலையாக இலக்கிய நண்பர்கள் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கொழும்பு தமிழ்ச சங்க மண்டபத்தில்  பாராட்டு மற்றும் வரவேற்பு விழாவை நடத்த உள்ளார்கள்.

தர்மா தர்மகுலசிங்கம் இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கும்,  புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தமிழ் இலக்கியத் துறைக்கும் பெரும் பங்காற்றி வருபவர். டென்மார்க்  நாட்டிலே இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து குடியேறுகின்ற இளைஞர்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கி வருபவர்.

டென்மார்க் நாட்டு அரசாங்கத்துடன் குறிப்பாக அந்நாட்டு பிரதமர் முதல் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் அவர் அந்த நாட்டிலே தேர்தல்களிலும் போட்டியிட்டவர். அந்த நாட்டு அரசு அவருக்கு சில கௌரவ பதவிகளை வழங்கி அவரது சேவையை கௌரவித்துள்ளது.

இன்றும் அவர்  இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தான் பிறந்த பகுதிகளில், தான் பிறந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் இலங்கை வாழ் கஷ்டப்படுகின்ற தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி இன மத பேதமின்றி ஏனைய சகல இன மக்களுக்கும் உதவி புரிவதில் முன்னிலையில் நிற்பவர்களில் அவரும் ஒருவர்.

யுத்தம் முடிந்த பின்னர் பல சந்தர்ப்பங்களில் அவர் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்த போதும் அன்றைய அரசாங்கங்கள் அதற்கான ஆதரவினை அவருக்கு வழங்கவில்லை என்ற மனச்சோர்வில் இருந்தவர். தற்போதைய அரசாங்கத்தின் உதவிகள் மூலமாக ஒத்தாசைகள் மூலமாக மீண்டும் நாட்டிலே டென்மார்க் நாட்டில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதன் காரணமாகவே இலங்கையின் பௌத்த அதிஉயர்பீடம் கண்டி மாநகரில் வைத்து அவருக்கு இந்த மாபெரும் கௌரவ தேசமான்ய என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. அவரது சேவைகள் தொடர நாங்களும் வாழ்த்துவோம்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail