ஓட்டமாவடி பொது மைதான உணவகங்களில் பாவனைக்கு உதவாத பண்டங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன!

Provincial
Editor 2025-04-02 20:23:00

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஓட்டமாவடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவங்களில் தரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களினதும் சமூக வலைத்தள முறைப்பாட்டையடுத்து மைதானத்தக்கு நேற்று (01) இரவு திடீரெனச் சென்ற  ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் அடங்கலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ஏ.அமீர், மைதானம் அமைந்துள்ள பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.ஷிஹான்,மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நௌபர், சுகாதார பரிசோதகர்களான ஏ.ஆர்.ஹக்கீம், ஏ.எல்.எம்.நஸீர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்போது 35  வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் இவற்றில்  6 வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சுகாதார முறையிலான உடைகள் அணியாமலும் மருத்துவ சான்றிதழ் பெறப்படாமலும் இருந்த 17  வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail