ஆயுதமுனையில் வாகனங்களை கொள்ளையிட்ட இருவர் கைது!

crime
Editor 2025-04-22 10:54:00

கூர்மையான ஆயுதங்களைக் காட்டி  அச்சுறுத்தி வாகனங்களைக  கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

வாடகைப் பயணத்துக்கு கார் தேவை என்று கூறியசந்தேக நபர்கள் தொலைபேசியில் அழைத்து, அதை வாதுவ பகுதிக்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கூறியதனக நம்பிய ஓய்வுபெற்ற இராணுவ வீரரான சாரதி குறித்த இடத்துக்குச் சென்றபோது, கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, சாரதியின் தங்க மோதிரத்தைக் கொள்ளையடித்து காரையும் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail