இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்! பாக் பிரதமர் சூளுரை

News
Editor 2025-05-07 10:21:00

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் உள்ளதாகத் தெரிவித்தார்.

"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர் நடவடிக்கை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், "இந்தப் போர் நடவடிக்கைக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவத்துடன் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர், "எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்" என்று தெரிவித்திருந்தார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail